லெப்டினன்ட் அஞ்சனிக்கா அவர்கள் மாவில் வீதி, புலோலி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தம்பிராஜா சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியிலிருந்து முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.