கப்டன் சாம்பவி அவர்கள் நெல்லியான், சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசலிங்கம் ஈஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கனகராயன் ஆற்றுப்பகுதியூடாக முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.