மேஜர் கைலை அவர்கள் யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னத்துரை பாஸ்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.