மேஜர் கேதீஸ் (பார்த்தீபராஜ்) அவர்கள் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கைலாயப்பிள்ளை உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.