லெப்டினன்ட் பார்த்தசாரதி அவர்கள் 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நடராசா யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.