கப்டன் நாதன் (மக்சி) அவர்கள் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மரியநாயகம் மைக்கல்யூட் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜனவரி 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நெட்டாங்கண்டல்ப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தி மேற்கொண்ட குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.