கப்டன் வண்ணன் (வள்ளுவன்) அவர்கள் உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சுந்தரம் பாலகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 டிசம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் மன்னக்குளப் பகுதியில் முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.