லெப்டினன்ட் சுக்கிரீபன் அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். உருத்திரமூர்த்தி சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 நவம்பர் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாய பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.