மேஜர் சிட்டு (தங்கத்துரை) அவர்கள் வத்திராயன் தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிற்றம்பலம் அன்னலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.