கடற்கரும்புலி கப்டன் மதனி அவர்கள் வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை தெய்வநந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 1996 அன்று கொழும்புத் துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.