கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். மாரிமுத்து வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 1996 அன்று கொழும்புத் துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.