கடற்கரும்புலி மேஜர் ஜெனார்த்தனன் (வீணைக்கொடியோன்) அவர்கள் காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 1996 அன்று கொழும்புத் துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.