கடற்கரும்புலி லெப்.கேணல் றதீஸ் (பிரதாபன்) அவர்கள் கந்தர்மடம், வேம்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருமைசந்திரன் செந்தில்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 1996 அன்று சிறிலங்காவின் கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.