கப்டன் குமரப்பா அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். புவிராஜசிங்கம் தயாளியன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 மே 1996 அன்று யாழ். மாவட்டம் கொடிகாமப் பகுதியில் தேசவிரோதிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்கா படையினர் கைது செய்ய முயன்ற போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.