கப்டன் நிரோயன் (நிரோ) அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். சிதம்பரப்பிள்ளை சற்குணராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 நவம்பர் 1995 அன்று வவுனியா கோட்டத்தில் படைக்காவலரண் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.