லெப்.கேணல் உருத்திரன் (உருத்திரா) அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிதம்பரநாதன் கருணாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.