கரும்புலி கப்டன் அகத்தி அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். இராமநாதன் நடராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.