லெப்டினன்ட் பழனி அவர்கள் நெல்லண்டை, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மார்க்கண்டு பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.