கடற்புலி லெப்.கேணல் மாதவி அவர்கள் இன்பருட்டி, அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு கலைச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கடற்புலிகளின் மகளிர் படையணி சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.