லெப்.கேணல் அமுதன் (மல்லி) அவர்கள் 4-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி பத்மநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 நவம்பர் 1994 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.