வீரவேங்கை வதனகுமார் அவர்கள் களுவாஞ்சிக்குடி, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மாமாங்கம் சாம்பசிவம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.