வீரவேங்கை சந்திரமாறன் அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகிப்போடி விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.