வீரவேங்கை பரமரதன் (பரமன்) அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். வடிவேல் புவனேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.