மேஜர் கெங்காதரன் அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நடராஜா ராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.