லெப்டினன்ட் துரையப்பன் அவர்கள் புளியங்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். பொன்னம்பலம் மோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 மார்ச் 1994 அன்று கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.