கப்டன் வெள்ளை (நியூட்டன்) அவர்கள் புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வநாயகம் சசிகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1993 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.