லெப்டினன்ட் அமலா (அமரா) அவர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சண்முகம் ஜெயா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.