லெப்டினன்ட் செந்தில் அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை செல்வம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஜூலை 1993 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காஞ்சிரம் காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.