லெப்டினன்ட் இளங்கோ அவர்கள் 4-ஆம் குறிச்சி, ஐயங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். உலகசேகரம் உமாகுலேந் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி முகாம்களுக்கு இடையே சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினரின் இரு அணிகள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி முகாம்களுக்கு இடையே சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினரின் இரு அணிகள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.