லெப்டினன்ட் மலரவன் (மன்சூர்) அவர்கள் தோப்பு, அச்சுவேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நல்லதம்பி ஞானசேகரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.