வீரவேங்கை மேனன் அவர்கள் மடுக்கோயில், சிலாவத்துறை, மன்னாரைச் சேர்ந்தவர். நவரட்ணன் இம்மானுவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.