வீரவேங்கை கௌதமி அவர்கள் கரடிப்போக்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். அம்பலம் சஜிக்கா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.