2-ஆம் லெப்டினன்ட் பரன் அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருட்ணர் அருச்சுனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 பிப்ரவரி 1987 அன்று யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.