கப்டன் வாசு அவர்கள் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். உருத்திராபதி சுதாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 14 பிப்ரவரி 1987 அன்று யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.