லெப்டினன்ட் அரவிந்தன் அவர்கள் ஜெயந்திநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தங்கவேலு ரவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 செப்டம்பர் 1992 அன்று திருகோணமலை மாவட்டம் பதவியா பராக்கிரமபுர பகுதியில் உள்ள கோங்வேவ படை மினி முகாமை தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.