கப்டன் வன்னியன் அவர்கள் துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை கணநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஆகஸ்ட் 1992 அன்று யாழ். மாவட்டம் மாதகல்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.