2-ஆம் லெப்டினன்ட் ஜெகதாஸ் அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். நவரத்தினம் சுதாராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஏப்ரல் 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சுங்கன்கேணிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.