வீரவேங்கை றோசான் (சசிக்குமார்) அவர்கள் முகத்துவாரம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நாகையா ரவிசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 பிப்ரவரி 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.