வீரவேங்கை குரு அவர்கள் திருநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மாரிமுத்து தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.