வீரவேங்கை ரமேஸ் அவர்கள் கொற்றாவளை, அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னத்துரை சபேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து கட்டைக்காடு நோக்கி முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.