வீரவேங்கை விசாகன் அவர்கள் கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சீனித்தம்பி தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஏப்ரல் 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.