2-ஆம் லெப்டினன்ட் சித்தா அவர்கள் 4-ஆம் வட்டாரம், பேசாலை, மன்னாரைச் சேர்ந்தவர். தர்னிஸ் பர்னாந்து சிறின்தோம் அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 மார்ச் 1991 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.