வீரவேங்கை தேசிகா அவர்கள் கோணாவில், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். செபஸ்தியாம்பிள்ளை அருள்நாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 டிசம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் கட்டுவன் குரும்பசிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.