வீரவேங்கை கேரனா அவர்கள் 2-ஆம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். ஜெகநாதன் ஜெகதீஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 டிசம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் கட்டுவன் குரும்பசிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.