பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்தவர். பரமு தமிழ்ச்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். இவர் 2 நவம்பர் 2007 அன்று கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.