மாவீரர் சிலம்பரசன் (சிலம்பு) அவர்கள் புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை மனோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ராதா வான்காப்பு படையணியின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.