கடற்புலி லெப்.கேணல் வெற்றியரசன் (ஸ்ரிபன்) அவர்கள் பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம், மன்னாரைச் சேர்ந்தவர். அருண்சில்வா கிருஸ்ரின் சில்வா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.