கடற்புலி லெப்.கேணல் நான்முகன் (லிங்கவேந்தன்) அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சூசைநாதன் ஸ்ரனிஸ்ரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.