மேஜர் விவேகன் அவர்கள் தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வல்லிபுரம் ரமேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூன் 1990 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறைப் பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.