கேணல் சங்கர் (முகிலன்) அவர்கள் கட்டைத்தோட்டம், வவுனியாவைச் சேர்ந்தவர். வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 2001 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் வீதியில் புதுக்குடியிருப்புக்கு அண்மையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.